சர்வதேச காசநோய் தினம் இன்று கடைபிடிப்பு

சர்வதேச காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் காசநோய் எதனால் ஏற்படுகிறது, இந்நோயால் பாதிக்கப்பட்டோர் முழுமையாக குணம் பெறமுடிமா என்பதை விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு…

1882 ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி காசநோயை உருவாக்கும் நுண் உயிரியை கண்டறிந்து டாக்டர் ராபர்ட் கோச் உலகிற்கு அறிவித்தார். இந்த நாள் காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் “சர்வதேச காசநோய் தினமாக” கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகின் நான்கில் ஒரு சதவீகிதத்தினர் காசநோயல் பாதிக்கப்பட்டு, ஆண்டிற்கு 16 லட்சம் பேர் வரை உயிரிழக்க கூடிய கொடி நோயாக இந்த நோய் உள்ளது. இதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மைக்கோ பேக்டீரியம் என்ற நுண்ணியிரியால் பரவும் காசநோய், ஒரு தொற்று நோயாக இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையே அதிகம் தாக்குகிறது.

காசநோயை முற்றிலும் குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இருந்த போதிலும் காசநோய் வந்தால் குணப்படுத்த முடியாது என்ற மூட நம்பிக்கை இன்னும் பாமர மக்களிடையே நிலவுகிறது. இரண்டு வாரத்திற்கு மேல் இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்கிறார் அரசு மருத்துவர் ரமேஷ்.

 

தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறும் நோயாளிகள், மருத்துவர்கள் அறிவுரைப் படி மருந்தகளை எடுத்துக் கொண்டால் விரைவில் குணம் பெறலாம் என்கின்றனர்.

2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், மக்களிடையே போதிய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே காசநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

Exit mobile version