சர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவு உள்ளிட்ட பொருள்களுடன் விண்கலம் ஒன்றை ரஷ்யா செலுத்தியுள்ளது.
விண்ணில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஏற்படுத்தி உள்ள, சர்வதேச விண்வெளி மையத்தில் வீரர், வீராங்கனைகள் தங்கியிருந்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றுடன் எம்.எஸ் 13 எனும் விண்கலத்தை கஜகஸ்தானில் இருந்து ரஷ்யா செலுத்தியுள்ளது. சோயூஸ் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தை 9ம் தேதி அடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.