மே 18 – சர்வதேச அருங்காட்சியக தினம்

18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வண்டிகள், பீரங்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை, புதுச்சேரி அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

மே 18 ஆம் தேதி, சர்வதேச அருங்காட்சியக தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியில் உள்ள அருங்காட்சியகத்தில், சர்வதேச அருங்காட்சியக தினவிழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி வாழ் தமிழர்களின் தொன்மையும்-பெருமையும் என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில், மொழிகள் கண்காட்சியை, கலைப்பண்பாட்டு துறை இயக்குநர் கணேசன் திறந்து வைத்தார். 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வண்டிகள், பீரங்கிகள், பீரங்கி குண்டுகள், துப்பாக்கிகள், குதிரை வண்டி, கை ரிக்சா ஆகியவைகள் கண்காட்சியில் இடம்பிடித்தன.

 

இந்த கண்காட்சியில், முதுமக்கள் தாழிகள், கற்சிற்பங்கள், உலோக கற்கள், அந்த காலத்து நாணயங்களும் இடம் பெற்றன. புதுச்சேரியின் முதல் கவர்னரான டியூப்லக்ஸ் பயன்படுத்திய கட்டில்கள், டைனிங் டேபிள்களும் கண்காட்சியில் இடம் பிடித்தன.

Exit mobile version