உலக தாய்மொழி தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியை போற்றிப் பாதுகாத்திடும் வகையில், உலக தாய்மொழி தினமான இன்று, தமிழ் மொழியின் சிறப்பை இளைய தலைமுறையினர் அறிந்திடும் விதமாக மாநில அளவில் கவியரங்கம், கருத்தரங்கம் போன்றவை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனை பேணிக் காத்திடும் வகையிலும் பல்வேறு விருதுகள் வழங்கப்படுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அன்றைய தினத்தை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலக தாய்மொழி தினமான இந்த இனிய நாளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.