ரஷ்யாவில், சர்வதேச MAKS விமான கண்காட்சியை அந்நாட்டு அதிபர் புதின் மற்றும் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் ஆகியோர் தொடக்கி வைத்து பார்வையிட்டனர்.
மாஸ்கோவில் உள்ள சுக்கோவாஸ்கி (Zhukovasky) என்ற இடத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில், ரஷ்யாவின் புதிய கண்டுபிடிப்பு விமானங்கள் மற்றும் 5ஆம் தலைமுறை போர் விமானங்கள் ஆகிவை காட்சிப்படுத்தப்பட்டன. இதனை, துருக்கி அதிபர் எர்டோகனுடன் பார்வையிட்ட அதிபர் புதின், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த Su-57, Su-35 போர் விமானங்கள், நடுத்தர ஹெலிகாப்டர், ராணுவம் அல்லாத பணிக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஆகியவற்றின் தனித்தன்மைகளை விளக்கி கூறினார். தொடர்ந்து Be-200 விமானம் மற்றும் அருகிலிருந்த நடுத்தர விமானத்துக்குள் நுழைந்த அதிபர் புதின், விமானி அமரும் காக்பிட் மற்றும் பயணிகள் இருக்கை ஆகியவற்றை ஆய்வு செய்து, விமானங்களின் வடிவமைப்பு மற்றும் அதன் அடிப்படை விவரக் குறிப்புகளையும் அதிபர் எர்டோகனுக்கு எடுத்துரைத்தார். பின்னர் ரஷ்யாவின் புதுமை கண்டுபிடிப்பான ஆளில்லா குட்டி விமானங்களான MC-21, Mi-38 உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார்.