மலேசியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
மலேசியாவில் நடப்பாண்டுக்கான சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்கா, மலேசியா, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளில் இருந்து சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 18 வயதுக்குட்பட்ட கட்டா, குமிதே பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஷ்வரி தங்கம் வென்றார். 11 வயதுக்கு உட்பட்டோருக்கான கட்டா கராத்தே போட்டியிலும், சண்டையிடுதலிலும் கமலேஷ் தங்கம் வென்று சாதனை புரிந்தார். இதனை தொடர்ந்து 40 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு நடத்தபட்ட கராத்தே போட்டியில் பிராபாகன் கட்டா போட்டியில் தங்கம் வென்றார். ஒட்டு மொத்தமாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் 6 தங்க பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.