கன்னியாகுமரியில் சர்வதேச ஆற்றல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டு தோறும் டிசம்பர் 14-ம் தேதி சரவதேச ஆற்றல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரியில், நாம் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும், நம் அன்றாடப் பணிகளுக்கு அவசியமான ஆற்றலை சிக்கனமாகப் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிலக்கரி, பெட்ரோல், மின்சாரம் ஆகியவை முக்கிய எரிபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், எண்ணெய் வளம் அடுத்த 45 ஆண்டுகளுக்கும், எரிவாயு 65 ஆண்டுகளுக்கும், நிலக்கரி 200 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வருங்கால சந்ததியினருக்கு எரிபொருள் ஆற்றலை விட்டு வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.