சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சர்வதேச போதை ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி போதையில் இருந்து மாணவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தினர். கோவை ரயில் நிலையம் முன்பு நடந்த இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர். போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், சமுதாய சீர்கேடு, குற்றச்சம்பவங்கள் உள்ளிட்டவற்றை நடனம் மூலமும், மைம் நாடகம் மூலமும் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.