கோவையில் சர்வதேச கிறிஸ்துமஸ் சாம்பியன்ஷிப் பூனைக் கண்காட்சி

கோவையில், கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு சர்வதேச கிறிஸ்துமஸ் சாம்பியன்ஷிப் பூனைக் கண்காட்சி நடைபெற்றது.

உலக பூனைகள் கூட்டமைப்பு சார்பில், இந்த சர்வதேச கிறிஸ்துமஸ் சாம்பியன்ஷிப் பூனை கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் HIMALAYAN CAT, BENGAL CAT, DOG FACE உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகைகளைஙச சேர்ந்த பூனைகள் பங்கு பெற்றன. இந்த நிகழ்ச்சியானது பூனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கண்காட்சிக்கு வந்த நிபுணர்களிடம், தங்களது வீட்டு பூனைகளை எப்படி பராமரிப்பது என அங்கு வந்தவர்கள் கேட்டறிந்தனர். மேலும், பூனைகளை கண்ட குழந்தைகள் அவற்றுடன் விளையாடி மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சர்வதேச சாம்பியன்ஷிப் பூனை கண்காட்சி, இந்தியாவிலேயே, கோவையில் மட்டும் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Exit mobile version