பொள்ளாச்சியில் நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழாவில் விதவிதமான பலூன்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தி வருகின்றன.
பொள்ளாச்சியில் 5வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, நெதர்லாந்து, ஸ்பெயின், போலந்து உட்பட 8 நாடுகளை சார்ந்த நல்ல அனுபவம் வாய்ந்த திறமையான பலூன் வீரர்கள் கலந்து கொண்டு இராட்சத பலூன்களை பறக்க விட்டனர். பூனை, ஐஸ்கிரீம், 2.0 வடிவிலான பலூன்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தன.
தமிழக சுற்றுலாத் துறை சார்பிலும் பிரமாண்ட பலூன் பறக்க விடப்பட்டது. இந்த பலூன் திருவிழா இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. காலை நேரங்களில் காற்றின் வேகத்தை பொறுத்து பலூன்கள் பறக்க விடப்படப்படுகின்றன. மாலை நேரங்களில் டெதரிங் என்று அழைக்கப்படும் நில மட்டத்திலிருந்து சுமார் 50மீட்டர் உயரம் வரை மேலே எழுப்பி பின்னர் தரையிறங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.