சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் – டிசம்பர் 09
ஊழல் மேலும் ஊழலைத் தோற்றுவிக்கிறது, மேலும் தண்டனைக்குரிய ஒரு சித்திரவதை கலாச்சாரத்தை ithu வளர்க்கிறது.”
UN Secretary-General, António Guterres.
ஐநா சபை நடத்தும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் இன்று உலகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது. ஊழல் நாடுகள் பட்டியலில் இப்போது 81 ம் இடத்தில் இருக்கும் ஐநாவின் உறுப்பு நாடான இந்தியாவும் இந்த தினத்தை இன்று அனுசரிக்கிறது.
The United Nations Development Programme (UNDP) மற்றும் United Nations Office on Drugs and Crime (UNODC) உடன் ஒவ்வொரு குடிமகனும் இணைந்து இந்த விழிப்புணர்வை பெறவும்,பெறவைக்கவும் வேண்டும் என்ற நோக்கில் ஐநா சபை இந்த ஊழலெதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி 2003 ம் ஆண்டு முதல் டிசம்பர் 9ம் தேதியை ஊழலெதிர்ப்பு தினமாக அறிவித்து அனுசரித்துவருகிறது.
சில நாடுகளில் இதே நாள் ஊழலெதிர்ப்பு வாரத்தின் ஒருநாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.
இன்று ஐநா வின் பொதுச்செயளாலர் அண்டொனியோ கட்டர்ஸ், உலகத்திற்கு வெளியிட்டுள்ள 2018 ம் ஆண்டின் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
- ஊழல் வடக்கு, தெற்கு, ஏழை, பணக்கார நாடுகளென்ற பாகுபாடின்றி எங்கும் உள்ளது.
- இது ஐக்கிய நாடுகளின் மதிப்பின் மீதான ஒரு தாக்குதல் ஆகும்.
- இது சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, மக்கள், மருந்துகள், ஆயுதங்கள் ஆகியவற்றின் சட்டவிரோத கடத்தல் போன்ற அநீதிகளுக்குத் துணைபோவதாகவும் உள்ளது.
- வரி ஏய்ப்பு, பணமோசடி மற்றும் பிற சட்டவிரோத பாய்ச்சல்கள் ஒரு நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஆதாரங்களை திசை திருப்புகின்றன.
- ஊழல் செலவு குறைந்தபட்சம் $ 2.6 டிரில்லியன் அல்லது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதம் என்று உலக பொருளாதார கருத்துக்கணிப்பு மதிப்பிடுகிறது.
- உலக வங்கியின் அறிக்கைப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான லஞ்சங்கள் கொடுக்கப்படுகின்றன.
- இத்தகைய ஊழல் மேலும் மேலும் ஊழலைத் தோற்றுவிக்கிறது, மேலும் இதனால் தண்டனைக்குரிய ஒரு கலாச்சாரம் வளர்கிறது.
- ஐக்கிய நாடுகள் சபை ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு எங்களிடமுள்ள முக்கிய கருவிகளில் ஒன்றேயாகும்.
- இது நிலையான வளர்ச்சி இலக்கு 16 மற்றும் வளர்ச்சி நடவடிக்கைக்கான ஒருமுன்வடிவை வழங்குகின்றது.
- மாநாட்டின் மறு ஆய்வு நுட்பத்தின் மூலம், நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அஸ்திவாரத்தை உருவாக்க நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். நாங்கள் குடிமக்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்க முடியும்,
- வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க மற்றும் திருடப்பட்ட சொத்துக்களை மீட்க சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும்.
- உலகெங்கிலும் உள்ள கோடானுகோடி மக்கள் இந்த ஆண்டு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில், இன்று முதல் ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்கலாம்.
-UN Secretary-General, António Guterres
ஊழல் மலினமாகிவிட்ட சமூகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இதற்கெதிராக நிற்க வேண்டிய கடமை உள்ளது. இனிவரும் இந்தியா ஊழலற்ற இந்தியாவாக மாற அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகம், தனிமனிதன் என ஒரு சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பும் எப்படி இதில் பங்கேற்கலாம் என்பதற்கு ஐநா வழங்கிய வழிமுறைகள்.
இவற்றைப் பின்பற்றி இன்றுமுதல் நாமும் ஊழலுக்கெதிரான போரில் ஒரு அடி முன்னோக்கிச் செல்வோம்.