உடல்நலம் சரியின்மை போன்ற காரணங்களால் இடைநின்ற மாணவர்கள் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் அனுமதியோடு 12ம் வகுப்புத் தேர்வை எழுதலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
2018 மார்ச்சில் பதினோராம் வகுப்புத் தேர்வு எழுதிய பின், உடல் நலம் சரியின்மை போன்ற காரணங்களால் மாற்றுச் சான்றிதழ் பெற்று, 2019 மார்ச்சில் பொதுத் தேர்வு எழுதாத இடை நின்ற மாணவர்கள் 2019-20 கல்வி ஆண்டில் பள்ளியில் சேர்ந்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த மாணவர்களின் பெயரை 12ம் வகுப்பு பெயர்ப் பட்டியலில் சேர்த்திட மென்பொருளில் வழிவகை இல்லை. இதனால் மாணவரின் பதினோராம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளியின் எண், தலைமை ஆசிரியரின் கடிதம் ஆகியவற்றை இணைத்து செப்டம்பர் 20ம் தேதிக்குள் கு.ஜெயஸ்ரீ, துணை இயக்குநர், அரசு தேர்வுகள் இயக்ககம்,சென்னை – 6 என்ற முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.