பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு விவசாயிகளை ஏமாற்றி இடைத்தரகர்கள் மோசடி செய்துள்ளதாக வேளாண் துறை செயலாளர் ககன் தீப் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். விவசாயிகளை ஏமாற்றிய இடைத்தரகர்கள், அவர்களுடைய ஆதார் எண்களை வாங்கியதாகவும், அவ்வாறு பெறப்பட்ட ஆதார் எண்களை, தனியார் கணினி மையங்களின் உதவியுடன் இணையதளத்தில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் விவரித்தார்