நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இடைக்காலத் தடை -தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தேனி நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ராகவேந்திர ரத்தோர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. கடந்த 10 ம் தேதி நடைபெற்ற விசாரணையில், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்தநிலையில், நியூட்ரினோ திட்டம் அடைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என்று பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Exit mobile version