இடைக்கால பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கிடையே முழுமையான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது என தகவல் பரவியதால் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், அவையை சமூகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, திர்ணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அரசு தாக்கல் செய்ய வேண்டும், முக்கிய மசோதாக்களை அவசர கதியில் நிறைவேற்ற கூடாது என்று உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.