ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை:அப்போலோ தரப்பிடம் விசாரிக்க இடைக்கால தடை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அப்போலோ நிர்வாகத்திடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணைத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட பலரும் இதுவரை நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க 21 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை அப்போலோ நிர்வாகம் நாடியது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம், அப்போலோ தரப்பிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு மற்றும் அப்போலா மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Exit mobile version