அரசு வேளாண் துறை மூலம் தென்னை சாகுபடியில் ஊடுபயிர் செய்ய ஊக்கப்படுத்தி வரும் நிலையில் விவசாயிகள் பெருமளவில் ஊடுபயிர் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அரசு வேளாண் துறை மூலம் தென்னை சாகுபடியில் ஊடு பயிராக பாக்கு, கோக்கோ போன்றவற்றை சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் விவசாயிகள் பெருமளவில் ஊடுபயிர் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது குடிமங்கலம் பகுதியில் தென்னையில் ஊடுபயிராக பாக்கு சாகுபடி பெருமளவில் நடந்து வருகிறது இதனால் விவசாயிகளுக்கு இரட்டை லாபம் கிடைக்க ஏதுவாக உள்ளது எனவே அரசு விவசாயிகளின் நலன் கருதி ஊடுபயிர் சாகுபடியை மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.