குற்றாலத்தில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

குற்றாலத்தில் சீசன் களைகட்ட தொடங்கியதை அடுத்து தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகின்றன.

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த மூன்று மாதங்களும் குற்றால அருவிகளில் விழும் மூலிகை கலந்த தண்ணீரில் குளித்து மகிழவும், நோய் பிணியை அகற்றி செல்லவும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

சுற்றுலா பயணிகள் வசதிக்காக குற்றாலம் பேரூராட்சி மற்றும் குற்றால நாதர் ஆலய நிர்வாகம் சார்பில் ஐந்தருவி பேரருவி ஆகிய அருவிக்கரைகளில் நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகளை அமைப்பதற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கடைகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Exit mobile version