ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி காளைகளுக்கு தீவிர பயிற்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடியரசு தினத்தன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி, காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மணப்பாறை அருகேயுள்ள கருங்குளம் ஜல்லிக்கட்டு என்றbbாலே அதற்க்கு தனி சிறப்பு உண்டு. காரணம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கருங்குளம் காளைகள் பங்கு பெறாத ஜல்லிக்கட்டு போட்டியே கிடையாது என கூறலாம். அந்த அளவிற்கு, காளைகள் போட்டிக்கு அழைத்து வரப்படும். 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள கருங்குளத்தில், 200-க்கும் மேற்பட்டோர், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில், வருகிற 26ம் தேதி, கருங்குளத்தில், ஜல்லிக்கட்டு போட்டி, நடைபெற உள்ளதால், காளைகளுக்கு பயிற்சி அளிப்பதில், அதன் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, அதிவேக நடைப்பயிற்சி, மண்ணில் குத்தும் பயிற்சி, மாடு பாய்ச்சல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருவதாக காளைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காளைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வப்போது பிரண்டை, பட்ட மிளகாய், சின்ன வெங்காயம்,  கடலை மிட்டாய் ஆகியவற்றையும் வழங்கி மாடுகளின் உடல் நலத்தையும் பாதுகாத்து வருவதாகவும் கூறுகின்றனர். அதே நேரம், காளைகளுடன் மல்லுக்கட்ட, இளம் காளையர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version