காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கும் விதமாக நீலகிரி வனப்பகுதிகளில் தீக்கோடு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இரவில் உறை பனியும், பகலில் நிலவும் அதிக வெப்பநிலையின் காரணமாக வனப் பகுதிகளில் உள்ள மரம், செடிகள், புல்வெளிகள் கருகி காணப்படுகிறது. இதனால் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளதால், மஞ்சூர், அப்பர் பவானி, கோரகுந்தா மற்றும் அவலாஞ்சி போன்ற அடர்ந்த வனப் பகுதிகளில் தீக்கோடு அமைக்கும் பணி மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த பணியில் 200க்கும் மேற்பட்ட வன பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இதனிடையே சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதியின்றி வனப்பகுதிக்கு செல்ல கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.