உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் தீவிரம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதுவரை 21 ஆயிரத்து 655 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய கணக்கெடுப்பின் படி, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு இதுவரை 15 ஆயிரத்து 226 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்காக 5 ஆயிரத்து 883 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 514 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 32 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், வரும் 16-ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடையவுள்ளதால், தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

Exit mobile version