விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 2020 ஆம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான அச்சகங்களில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது ஆங்கில புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், காலண்டர் தயாரிப்புக்கான ஆடர்கள் குவிந்து வருகின்றன. விஐபி நாள்காட்டி, 3D நாள்காட்டி என 50-க்கும் மேற்பட்ட மாடல்களில் காலண்டர்கள் தயாராகின்றன.
சிவகாசி காலண்டர்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளதால் இரவு பகலாக காலண்டர் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பரிசாக காலண்டர் வழங்குவதால் ஆடர்கள் குவிந்து வருவதாக அச்சக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, காலண்டர் உற்பத்தி மூதான 12 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.