பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது மண் பானை, கரும்பு, மஞ்சள் அகியவை முக்கிய இடம் பெறும். அந்த வகையில், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம் கிராமத்தில், மண்பானை தயாரிக்கும் பணியில் முழுவீச்சில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு, 25 முதல், 40 பானைகள் தயாரிப்படும் நிலையில், 40 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பானைகள் விற்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் பகுதியில் தயாரிக்கப்படும் பானைகளுக்கும், மண் அடுப்புகளுக்கும், மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.