நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்கண்காட்சியை முன்னிட்டு 2 லட்சம் மலர் நாற்றுகள் நடும் பணிகள் துவங்கியது.
குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனில் 62-வது பழக் கண்காட்சி நடைபெறுவதை முன்னிட்டு, மலர் நாற்றுகள் நடவு பணி துவங்கியதுள்ளது. இதனை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பெபிதா தொடங்கி வைத்தார். இதில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், உள்ளிட்ட 110 வகையான உள்ளுர் மற்றும் வெளி நாட்டு மலர்கள் என மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் செடிகளை தொட்டியிலும், பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நடவு பணியில் அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் என 84 பேர் ஈடுபட்டுள்ளனர்.