மெட்ரோ நீரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

சென்னையில் வசிப்பவர்கள் மெட்ரோ நீரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதை ஒரு செய்தி தொகுப்பாக பார்க்கலாம்.

சென்னையில் வசிப்பவர்கள் மெட்ரோ நீரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் முறையின் படி, மெட்ரோ நீரை பெற விரும்பும் பயனாளர்கள், chennaimetrowater.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யவேண்டும். இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள Book a water tanker என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, முகவரி, பெறப் போகும் நீரின் கொள்ளளவு உள்ளிட்ட தகவல்களை பதிவிட வேண்டும். பின்பு OTP எனப்படும் ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் வழியாக, மெட்ரோ நீர் புக்கிங் உறுதி செய்யப்படுகிறது. 6 ஆயிரம் லிட்டர் மெட்ரோ நீருக்கு, 475 ரூபாயும், 9 ஆயிரம் லிட்டர் மெட்ரோ நீருக்கு 700 ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது. உடனடியாக நீர் வேண்டும் பட்சத்தில் தட்கல் முறையில் பதிவுச் செய்யும் முறையும் உள்ளது. ஒருவருக்கு மெட்ரோ நீர் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டவுடன், அவர் ஏழு நாட்களுக்கு பிறகு மட்டுமே மீண்டும் மெட்ரோ நீரை பதிவு செய்ய முடியும்.

Exit mobile version