இன்று முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகளில் உடனடிக் கடன்

நாட்டின் 250 மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகளில் உடனடிக் கடன் வழங்கப்படுகிறது.

விழாக்காலங்களில் வணிக நிறுவனங்களிடமும் மக்களிடமும் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தும் வகையில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 400 மாவட்டங்களில் கடன் வழங்குவதில் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது எனப் பொதுத்துறை வங்கிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக நாட்டின் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பரோடா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உடனடி கடன் வழங்கப்படுகிறது. சில்லறை வணிகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு உடனடி கடன் வழங்கப்படுகின்றன. வீட்டுக் கடன், வாகனக் கடன் கல்விக்கடன் ஆகியனவும் உடனடியாக வழங்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாகத் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 முதல் 25ஆம் தேதி வரை 150 மாவட்டங்களில் உடனடி வங்கிக் கடன் வழங்கும் முகாம் நடத்தப்படும்.

Exit mobile version