இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் Usernames, Password கசிவு

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் Username, Password விபரங்களை, ஷோசியல் கேப்டன் பூட் (Social captain booting) என்ற சாப்ட்வேர் வெளியில் கசியவிட்ட தகவல் வெளியாகி உள்ளது.

டெக் க்ரஞ்சின் என்ற அமெரிக்க இணையத்தள பதிப்பு நிறுவனம், வெளியிட்ட அறிக்கையில்,இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின், பாஸ்வேர்டுகளை, Social Captain சாப்ட்வேர் சேமித்து வைப்பதாக குறிப்பிட்டது. மேலும், Social Captain சாப்ட்வேரை பயன்படுத்துபவர்கள், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும், யாருடைய விபரங்களையும், அவர்கள் அனுமதி இன்றியே சேகரிக்கலாம் என்ற விபரமும் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவல் வெளியானதை அடுத்து, உள்நுழைவு சான்றுகளை முறையற்ற வழியில் சேமிப்பதன் மூலம், சோசியல் கேப்டன் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது என்றும், இதற்கு சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம் என்றும் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

 2017-ஆம் ஆண்டில், இன்ஸ்டாகிராம் மூலம் 6 மில்லியனுக்கும் அதிகமான பிரபல பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததும், அப்படி கசியவிடப்பட்ட தகவல்கள் அனைத்தும் வேறு பல டேட்டா நிறுவனங்களுக்கு, விற்கப்பட்டது தெரியவந்தது. இந்த விற்பனை, பிட்காயின் வழியாக பதிவு ஒன்று 10 டாலருக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version