சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பல புதிய வசதிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்ப்போம்.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டில் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் செயலிகளில் உள்ள வசதிகளைப் போன்றே தற்போது இன்ஸ்டாகிராமிலும் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்ப காலத்தில் புகைப்படத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட இன்ஸ்டாகிராம் தற்போது குறுந்தகவல் அனுப்பும் வசதியுடன் ஆடியோ சாட்டிங் , வீடியோ சாட்டிங் மற்றும் புகைப்பட சாட்டிங் செய்யும் வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதற்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் மட்டுமே பதிவு செய்த வாய்ஸ் மெசேஜை ஒரே நேரத்தில் தனி நபர் மற்றும் குழுக்களுக்கு அனுப்ப முடியும்.
குறிப்பாக பார்வையற்றோரும் புகைப்பட விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில், புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் சேவையை கிளிக் செய்து அதற்கான விவரங்களை சேகரிக்கும் பட்சத்தில், பார்வையற்றவர்களும் புகைப்பட விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.