இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த திருச்சி என்ஜினீயரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரது லாப்டாப்பில் ஆபாச வீடியோக்களில் இருந்த 40க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், தில்லைநகரை சேர்ந்த விஷ்வா என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, தன்னை காதலிப்பதாக கூறி பழகியதாகவும், பின்னர் தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர், இணையத்தில் அதனை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, 25 சவரன் நகை, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், லேப்டாப், ஐ-போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து வழக்குபதிவு செய்த ஆய்வாளர் சியாமளாதேவி, கல்லூரி மாணவி மூலம் விஷ்வாவை குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து பிடித்தனர். தொடர்ந்து விஷ்வாவின் சோதனை மேற்கொண்டு, லேப்டாப், ஐபோன் மற்றும் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்த விஷ்வா, இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் பழகி அவர்களை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துள்ளார்.

அதனை, வீடியோ எடுத்து வைத்து, இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டி, அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

இதுவரை சென்னையை சேர்ந்த மாணவி உள்பட ஏராளமான பெண்களிடம் பல லட்சக்கணக்கான ரூபாய் பறித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், லேப்டாப்பில் 40-க்கும் மேற்பட்ட பெண்களுடன் விஷ்வா உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இருந்ததை கண்ட காவல்துறையினர் அந்த பெண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக விஷ்வா இதே வேலையில் ஈடுபட்டதை கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இருசக்கரவாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்று அறிவிக்கும் போலீசார், இதுபோன்று இணையக் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் பெற்றோருக்கும் தண்டனை வழங்கினால் மட்டுமே இதுபோன்ற சமூகக் குற்றங்கள் குறையும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்தியாளர் ஸ்டீபன் மற்றும் ஆசாத்.

Exit mobile version