பருவமழை துவங்கியுள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் துணைக் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அணையின் நீர் வரத்து குறித்தும் நீர் கசிவு குறித்தும் துணைக்குழுவினர் ஆய்வு செய்தனர். தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஆய்வு நடத்தப்பட்டது. மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உட்பட 5 பேர் பங்கேற்றனர். நீர்வரத்து, நீர்கசிவு, அணை பாதுகாப்பு குறித்த அறிக்கை மூவர் குழு முன்பு விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஐவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.