சித்ராவுடன் இணைந்து நடித்த சரண்யாவிடம் விசாரணை

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக சக நடிகையிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

சித்ரா தற்கொலை வழக்கு குறித்து அவரது குடும்பத்தாரிடமும், கணவர் மற்றும் கணவரது குடும்பத்தாரிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தியுள்ளார். இந்நிலையில், அவருக்கு பழக்கமானவர்கள், நண்பர்களிடம் விசாரிக்கும் விதமாக, சித்ரா தங்கியிருந்த வீட்டில் அருகில் வசிப்பவர்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் சித்ராவுடன் இணைந்து நடித்துள்ள நடிகை சரண்யாவிடம், பணியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா அல்லது மன உளைச்சலில் இருந்தாரா என்பது குறித்து சரண்யாவிடம் தனியாக விசாரணை மேற்கொண்டார். மேலும் சித்ரா தற்கொலை செய்து கொண்ட சொகுசு விடுதியில் ரூம் பாயாக பணியாற்றியவரிடமும் விசாரணை நடைபெற்றது.

Exit mobile version