நிகழாண்டு குடியரசு தின அணிவகுப்பின் புதுமையான நிகழ்வுகள்

71 குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் அணிவகுப்பில் இடம்பெறும் முதன்முறையாக நடக்கும் நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்…

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று டெல்லியில் உள்ள அமர் ஜோதி ஜவானில் பிரதமர் மரியாதை செலுத்திவிட்டு பின்னர் ராஜபாதைக்கு செல்வார். இந்த ஆண்டு இந்த நடைமுறையும் மாற்றப்படுகிறது. புதிதாக  டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தி விட்டு ராஜபாதை அணிவகுப்பில் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் இந்நிகழ்ச்சியில் முப்படைத் தளபதிகள் மற்றும் தலைமைத் தளபதி பங்கேற்கின்றனர்

குடியரசு தின விழாவில் டானியா ஷெர்கில் என்கிற பெண் அதிகாரி முதன்முதலாக முழுவதும் ஆண்களை மட்டுமே கொண்ட படைப்பிரிவை வாளை ஏந்தி வழிநடத்துகிறார். இவரது குடும்பத்தினர் கடந்த 4 தலைமுறைகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவரது தந்தை ராணுவத்தில் ஆயுதங்களைக் கையாளும் சிறப்பு பிரிவில் பணியாற்றியவர். அவரது தாத்தா சிண்டே, ஹார்ஷ் என்ற படைப்பிரிவிலும் கொள்ளுத் தாத்தா சீக்கியப் படைப்பிரிவிலும் பணியாற்றியுள்ளனர்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூர் பல்கலைக் கழகத்தில் இளங்கலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் படித்த அவர் பின்னர் ராணுவத்தில் சேர்ந்தார். சென்னை ஓடிஏவில் பயிற்சி முடித்த அவருக்கு சமிஞ்சைகளை கையாளும் படைப்பிரிவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. கடந்த 72 ஆண்டுகளில் முழுவதும் முதன்முறையாக பெண் ஒருவர் தலைமையேற்பது இதுவே முதன்முறையாகும். கடந்த ஆண்டு லெப்டினண்ட் பாவனா கஸ்தூரி ராணுவத்தின் ஏ.எஸ்.சிக்கு தலைமையேற்று வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.  1990 ஆம் ஆண்டிலிருந்து இந்திய ராணுவத்தில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். 30 வருடங்கள் கழித்தே அதிகாரிகள் படைக்கு தலைமையேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றார் டானியா

முழுவதும் பெண்களை மட்டுமே உள்ளடக்கிய துணை ராணூவப்படை பிரிவு ராஜபாதையில் மோட்டார் சைக்கிளில் சாகசங்களை செய்து காட்டவுள்ளது.

புதிதாக இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள அபாச்சி மற்றும் சினுக் ரக ஹெலிகாப்டர்கள் அணிவகுப்பில் பங்கேற்கின்றன. இதில் சினுக் ரக ஹெலிகாப்டர்கள் விக் என்ற ஒருவகை வியூகத்திலும் அபாசி ஹெலிகாப்டர்கள் அம்பு வடிவ வியூகத்திலும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நான்காம் தலைமுறைப் போர் விமானமான ரபேல் குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்கிறது. மிஷன் சக்தி என்ற திட்டத்தின் கீழ் இந்தியா பரிசோதித்த விண்ணில் உள்ள செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ராக்கெட்டுகளும் அணிவகுப்பில் கலந்து கொள்கின்றன. இந்த ஏவுகணையின் மூலம் கடந்த ஆண்டு விண்ணில் இருந்த உபயோகமற்ற செயற்கைகோளை இந்தியா வெற்றிகரமாக தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது

மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட தனுஷ் அதிநவீன பீரங்கிகள், 5 மீட்டர் அகலம் கொண்ட குறுகிய சரவத்ரா பாலம், வான் பாதுகாப்பு ரேடார்கள் அணிவகுப்பில் பங்கேற்கின்றன

Exit mobile version