நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை சிறைச்சாலையில், ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், களக்காடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கொலை முயற்சி மற்றும் வெடிகுண்டு உபயோகித்த வழக்கில் வாகைகுளத்தைச் சேர்ந்த முத்துமனோ என்பவர் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கும், சில கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில், முத்துமனோ படுகாயமடைந்தார்.
அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.