குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து இருவரைக் கொன்ற காட்டுயானை

பொள்ளாச்சி மாவட்டம் நவமலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ள ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்

மலைகிராமமான நவமலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புகுந்த காட்டு யானை ரஞ்சனா என்ற சிறுமியையும், மாகாளி என்பவரையும் தாக்கி கொன்றது. குடியிருப்பு பகுதிக்கு அருகில் முகாமிட்டிருக்கும் காட்டு யானை மாலை வேளைகளில் ஊருக்குள் வருவதால் வீட்டை விட்டு வெளிய செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மேலும் யானையை விரைவில் வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இதற்காக டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து பரணி, சுயம்பு என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானை மிகவும் ஆக்ரோசமாக இருப்பதால் அதைப் பிடிப்பது சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version