விக்ரம் லேண்டர் பற்றிய தகவல் தெரியவில்லை – நாசா

சந்திரயான் 2 மூலன் விண்ணில் செலுத்தப்பட்டு நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் எங்குள்ளது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. 

இஸ்ரோ மூலம் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரானது சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக நிலவில் தரையிரக்கப்பட்டது. லேண்டர் தரையிறங்கும் சில நிமிடங்களுக்கு முன்பாக லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்த நிலையில், நாசாவும் அதன் பங்கிற்கு, லேட்டரை தேடும் முயற்சியில் இறங்கியது. அதன்படி, இஸ்ரோ தனது செயற்கை கோள்கள் மூலம் விக்ரம் லேண்டருக்கு ஹலோ என்ற தகலை அனுப்பும் முயற்சியிலும், விக்ரம் லேண்டர் நிலவின் எந்தப் பகுதியில் தரையிறங்கியுள்ளது என்பது பற்றியும் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டது. இந்த நிலையில், நிலவில் விக்ரம் லேண்டர் எங்குள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை என நாசா தற்போது தெரிவித்துள்ளது.

Exit mobile version