புயல் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்புவரை தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

புயல் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்புவரை தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என சுகாதார துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு, செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தொற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு, பொது சுகாதார துறையால் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த 19 நாட்களாக முன்னெச்சரிக்கை மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் சீரமைக்கப்பட்டு, அனைத்து சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் பாதித்த மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பும் வரை தொடர்ந்து அனைத்து சேவைகளும், மக்கள் நல்வாழ்வு துறையால் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version