ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு வீடு வீடாக சென்று கடைசி நாளாக, இன்று டோக்கன் விநியோகிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பெற கடந்த 1ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகிக்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விடுபட்டுள்ள ஒரு சிலருக்கு கடைசி நாளாக இன்று டோக்கன் விநியோகிக்கபட்டு நாளை முதல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு 225 அட்டைதாரர்களுக்கு மிகாமல் பொருட்களை வழங்கவும், டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கக் கூடாது எனவும், கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.