டிஜிட்டல் துறையால் இந்திய பொருளாதாரத்தில் தொழில் புரட்சி – பிரதமர் மோடி

டிஜிட்டல் துறையால் இந்திய பொருளாதாரத்தில் தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நிதி ஆணையம், சிங்கப்பூர் வங்கிகள் கூட்டமைப்பு உள்ளிட்டவை இணைந்து ஆண்டு தோறும் ‘சிங்கப்பூர் பின்டெக்’ என்ற பெயரில் வர்த்தக மாநாட்டை நடத்தி வருகின்றன. இது உலகின் மிகப்பெரிய வர்த்தக மாநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்று வரும் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, டிஜிட்டல் இந்தியாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு இந்தியா மிகச்சிறந்த இடமாக உள்ளது என்று தெரிவித்தார். இந்திய பொருளாதாரத்தில் டிஜிட்டல் துறையின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது என்று அவர் கூறினார். வரும் நாட்களில் வங்கி சேவையானது பொதுமக்களின் இல்லம் தேடி வரும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரித்துள்ளதால் அதிக அளவில் நேரம் சேமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் 13-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Exit mobile version