இந்தோனேசியாவில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 கைதிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
தலைநகர் ஜகார்த்தாவில் தங்கெராங்க (Tangeran) சிறைச்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 122 கைதிகள், ‘சி’ பிளாக் சிறைக் கட்டடத்தில் உள்ளனர். இந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 41 கைதிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 39 கைதிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக அந்த கட்டடத்தில் இருந்த மற்ற கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயிரம் கைதிகள் மட்டுமே அடைக்கப் போதுமான சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.