இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் சுனாமி – உயிரிழப்பு 168 ஆக உயர்ந்துள்ளது

இந்தோனேசியாவை சுனாமி தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு பகுதியில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டது. இது சுந்த் ஸ்ட்ரெய்ட் கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கியது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பேரலைகள் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது. 750க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வீடுகள், மேம்பாலங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சுனாமி தாக்குதலை தேசிய பேரிடராக அறிவித்துள்ள இந்தோனேசிய அரசு, மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Exit mobile version