சுற்றுலாவுக்கும், இயற்கை பேரிடர்களுக்கும் புகழ்பெற்ற இந்தோனேஷியா தற்போதைய தலைநகரத்தை மாற்றி, புதிய தலைநகரத்துக்கு மாறுகிறது.
உலகில் ஆண்டுதோறும் 25 செண்டி மீட்டர் தூரம் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் நாடான இந்தோனேஷியா, பாதுகாப்பு காரணங்களுக்காக, தனது தலைநகரத்தை , தற்போதைய தலைநகரமான ஜகர்த்தாவிலிருந்து மத்திய இந்தோனேஷியாவில் உள்ள போர்னியோ தீவுக்கு மாற்றவுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார். புதிய தலைநகருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பகுதி மையத்தில் இருபதோடு, நகரப்புறத்துக்கு அருகாமையில் உள்ளதாகவும், போர்னியோ தீவில் இயற்கை அச்சுறுத்தல்கள் மிகவும் குறைவு என்றும் அதிபர் தெரிவித்தார். இந்தோனேஷியா 2050ம் ஆண்டுக்குள் மூன்றில் ஒரு பங்கு நகரம் நீருக்குள் மூழ்கும் என்று புவியியலாளர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.