இந்தோனேஷியாவின் குண்டு பையன் – எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!!!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் இருக்கும் சிபுர்வசரி என்ற குக்கிராமத்தை சேர்ந்த தம்பதி அதி சோமந்திரி -ரொகாயா.

இவர்களின் 10 வயது மகன் ஆர்யா பெர்மனா. இவருடைய உடல் எடையை கேட்டால் அதிர்ந்து போயிடுவீங்க. தன்னுடைய பத்து வயதில் 190.5 கிலோ எடை கொண்டிருந்தான் ஆர்யா.இதனால் இந்தோனேசியாவில் அதிக எடை கொண்ட சிறுவன் என்று அதிகளவில் பேசப்பட்டான்.

சிறுவன் ஆர்யா ஒரு நாளைக்கு 5 வேளை சாப்பிடுவான். சாதம், மீன், மாட்டிறைச்சி, காய்கறி சூப் என்று எல்லாவற்றையும் சாப்பிடுவான். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால், உடல் எடை அதிகரித்திருக்கிறது.

இப்படி உடல் எடை அதிகரிப்பின் காரணமாக ஆர்யாவால் நிற்கவே முடியாமல் போனது. பெற்றோர்கள் பயந்து போய் மருத்துவர்களை அணுகியுள்ளனர். ஆர்யாவை பரிசோதனை செய்து உணவில் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்தால் ஆர்யாவின் உடல் எடையை குறைக்க முடியும் என்று தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து 2 வருடங்கள் கடும் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்து தற்போது 95 கிலோ எடை குறைத்து. இன்றைக்கு சாதாரண குழந்தைகளை போல் வீதிகளில் விளையாடி வருகிறான். 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கிவிட்டான்.

ஆர்யாவின் எடை குறைப்புக்குப் பின்னால் அவனது தாயும் தந்தையும் பட்ட கஷ்டங்கள் அதிகம். அக்கம் பக்கத்தினர், உறவினர்களிடம் எல்லாம் கடன் வாங்கி, ஆர்யாவைக் காப்பாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version