இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள பெசிசிர் செலாடன் மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே 36 கிமீ தொலைவிலும், 82 கி.மீ ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது அருகில் உள்ள ஜம்பி மாகாணத்திலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, சேதங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post