இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பிற்கு பயிற்சி முடித்த வீரர்களை எல்லை பாதுகாப்பிற்கு அனுப்பும் விழா

சிவகங்கை அருகே, இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த வீரர்களை எல்லை பாதுகாப்பிற்காக அனுப்பும் விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் 29 வீரர்கள் பயிற்சியை முடித்துள்ள நிலையில், வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில், வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த பயிற்சி மையம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 16 வாரங்களாக துணை நிலையிலான கமாண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அலுவலர்களாக 29 பேர் பயிற்சி பெற்றனர். இவர்களை நாட்டின் எல்லை பாதுகாப்புப் படைக்கு அனுப்பி வைக்கும் விழா நடைபெற்றது. இதற்கு இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் டி.ஐ.ஜி. ரன்வீர் சிங் தலைமை வகித்தார். பயிற்சி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சாகச நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Exit mobile version