திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள ரெட்டியக்குப்பம் பகுதியில் இந்தோ-இஸ்ரேல் காய்கறி மகத்துவ மையம் அமைந்துள்ளது.
இங்கு விவசாயத்தில் தலைசிறந்து விளங்கும் நாடான இஸ்ரேல் நாட்டின் தொழில் நுட்பங்களுடன், வெளிநாட்டு காய்கறிகள் பயிரிடப்பட்டு தமிழக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் திறந்த வெளியில் மூடாக்கு போட்டு மிளகாய், கத்தரி, முழாம்பழம் ஆகியவகளை சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்து மானிய விலையில் வழங்கி வருகின்றனர்.