நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தனிமனித ஒத்துழைப்பு அவசியம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தனிமனித ஒத்துழைப்பு மிக அவசியமானது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளநிலையில், தமிழகம் முழுவதும் அரசு சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

பின்னர் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க, அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றார். நிறுவனங்கள், வீடுகளில் பராமரிப்பின்றி இருந்தால், அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Exit mobile version