இந்தியாவின் மிக நீண்ட விரைவுச் சாலையினை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். டில்லி-மும்பை விரைவுச் சாலையில் 246 கி.மீட்டர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. டில்லி-மும்பை விரைவுச்சாலையானது 1386 கி.மீ தொலைவில் அமைக்கப்படுகிறது. இந்தியாவிலேயே இதுதான் மிக நீளமான விரைவுச்சாலை இதுதான். இந்த சாலை டில்லி-மும்பை இடையிலான தொலைவை 12% குறைக்கும் மேலும் பயண நேரத்தை 50% குறைக்கும். தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்கள் வழியாக இந்த சாலை செல்கிறது.
இந்த சாலையின் முதற்கட்ட பணியான டில்லியின் டோசாவிற்கும் ராஜஸ்தானின் லால்சோட்டிற்கு இடையே உள்ள 246 கி.மி வழித்தடத்தின் பணி நிறைவுபெற்றது. இந்த வழித்தடம் மட்டும் 12,510 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.