ஐதராபாத் நிஜாமின் ரூ.306 கோடி பணம் இந்தியாவுக்கு சொந்தம்: பிரிட்டன் உயர்நீதிமன்றம்

ஐதராபாத் நிஜாமுக்கு சொந்தமான 306 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், இந்தியாவுக்கு சாதகமாக பிரிட்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை போது ஐதராபாத் நிஜாம் தனது சமஸ்தான கஜானாவில் இருந்த 8 கோடியே 82 லட்ச ரூபாய் பணத்தை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளார். லண்டனில் உள்ள நேட்வெஸ்ட் வங்கியின் மூலம் பாகிஸ்தான் நாட்டின் தூதரிடம் கொடுத்து வைப்பு செய்யப்பட்டது. இந்த பணத்திற்கு ஐதராபாத் நிஜாமின் வாரிசுகளும், பாகிஸ்தானும் உரிமை கோரியதால், சர்ச்சை எழுந்தது. இதனால் ஐதராபாத் நிஜாமின் பணம் யாருக்கு சொந்தம் என்பதில் 70 ஆண்டுகளாக குழப்பம் நிலவியது. இது தொடர்பான வழக்கு பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள, பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டதாகவும், இதற்காக ஐதராபாத் நிஜாம் வழங்கிய பணம் என்று பாகிஸ்தான் வாதாடியது.

இந்த நிலையில், வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள பிரிட்டன் உயர் நீதிமன்றம், லண்டன் வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ள நிஜாமின் பணம் அவரது வாரிசுகளுக்கும், இந்தியாவுக்கு மட்டுமே உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளது. 1948-ல் லண்டன் வங்கியில் வைப்பு செய்யப்பட்ட பணம் தற்போது வட்டியுடன் சேர்த்து 306 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Exit mobile version