தைவான் வீராங்கனையை வீழ்த்திய இந்தியா வீராங்கனை பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தைவான் வீராங்கனையை வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, தைவான் வீராங்கனை தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை 12க்கு 21 என்ற புள்ளி கணக்கில் பறிகொடுத்த பி.வி.சிந்து பின்னர் சுதாரித்து கொண்டார். 2-வது சுற்றை 23க்கு 21என்ற கணக்கிலும், 3-வது சுற்றை 21க்கு19 என்ற கணக்கிலும் கைப்பற்றி தாய் ஜூயிங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு சிந்து முன்னேறினார்.

Exit mobile version