முதலீடுகளுக்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் உலக வங்கி பட்டியலில் எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் குறித்த தகவல் வெளியானது. அதில் இந்தியா கடந்த ஆண்டைக்காட்டிலும் 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்திற்கு முன்னேறி இருந்தது.
இதற்கு உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எளிதான வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது முன்னெப்போதும் இல்லாத ஒரு “வரலாற்று சாதனை” என வர்ணித்துள்ளார்.
இந்தியாவை கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் ஒரு குறுகிய கால இடைவெளியில் முன்னேற வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று கூறியிருக்கிறார். பிரதமர் மோடியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவமே இதற்கு காரணம் என ஜிம் யோங் கிம் பாராட்டியுள்ளார்.